Monday, July 21, 2008

சமர்ப்பணம்

பட்டில் பாவாடை கட்டி
பாதமிரண்டிலும் கொலுசுகள் பூட்டி
வாசனை மல்லியை தலையில் சூட்டி சூட்டி
எங்கள் அழகனைத்தும் புறம் சார்ந்த விஷயம் என்று
புரிய வைத்துகொண்டிருந்தது சமூதாயம்.
ஐயா!
உங்கள் அக்னி சிறகுகள் மட்டும் எங்களை
வருடாமல் போயிருந்தால்
எங்கள் அகம் ஆற்றல்களின் கிடங்கு
என்பதை அறியாமலேயே வேடிக்கை மனிதர்களை
போல் வீழ்த்திருப்போம் நாங்களும்.
கள்ளி பால் உண்டு சுருண்ட
எங்கள் சகோதரிகளின் சவங்களை பார்த்து
மையிட்ட எங்கள் கண்களுக்கு கனவுகள்
காண தகுதியிருக்கிறதா
என சத்தமில்லாமல் அடங்கிபோயிருந்தன
எங்கள் ஆசைகள் மொத்தமும் .
ஐயா!
உங்கள் தீர்க்க தரிசனம் மட்டும்
எங்களை வந்து சேராமல் போயிருந்தால்
இன்று ஞான பெருவெளியில் நம்பிக்கையோடு
மிதக்கும் எங்கள் கனவுகள் எல்லாம்
ஏதோ அடுப்பில் கிடந்த விறகின் நெருப்பில் வெந்து போயிருக்கும்.
ஐயா!
"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடி சுவடுகளை
பதிக்க விரும்பினால்
உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே
என்ற உங்களின் வார்த்தைகளால்
வார்தேடுகப்பட்டவர்கள் நாங்கள் .

இன்று உங்களால்
எங்கள் ஆன்மாவின் உள்ளொளி ஒன்று தான்
இந்த தேசத்தை ஒளிரசெய்யும் என்பதை உணர்கிறோம் .
எங்களுக்குள் இருக்கும் இறையாண்மை தான்
இந்த தேசத்தின் எழுச்சி என்று நம்பிக்கை கொள்கிறோம்.

ஆதவனின் அருள் கதிர்கள் எங்கெல்லாம் பாய்கிறது என்று
அன்னார்க்கு தெரிவதில்லை
உங்களின் இருத்தலால் மட்டும் எத்தனை
மனங்கள் மலர்திருக்கும் என்று
உங்களுக்கு குட தெரிய நியாமில்லை
வார்த்தைகளுக்குள் சுருக்கி சொல்ல வேண்டும் என்றால்
எங்கள் வாழ்வின் அர்த்தங்கள் மொத்தமும்
உங்கள் காலடிக்கு சமர்ப்பணம்!

1 comment:

Ramya said...

kalakare Jayasree, kavidhai mikka sirapaaga ulladhu. nee avarai sandhithuvandadu perumaikuriya nigazhvu. vaazhthukal. kaduvulidam nam vazhipaadugal, manadhil ezhum unmaiyana ennagalodu poi serum. adu pola, un manadhil avar meedhu nee vaithirukum nambikkai, mariyadhai matrum anbin piradipalanaaga, miga mukkiyamaga, un 'kanavugal',meiyaana aarvam, aathangam, anaithum velivanduladu. :)