Thursday, June 19, 2008

நிலம் பெயர்ந்தவள் - லதா


சமிபத்தில் படித்து , பிடித்திருந்தது !

யாருக்கும் இல்லாத பாலை

போர்

களைத்து நிற்கிறாள் காளி

மணல் காற்றின் வெம்மை வாட்டும்

எல்லையற்ற வெளியில்

ஒவ்வொரு கையாய் வீசுகிறாள்

ஒலியுடன் விழுகின்ற ஆயுதங்கள்

துர்வாரும் இயந்திரங்களின் இசையில்பாடிச் செல்லும்

பலவிதப் பெண்களும்

அவள் வெற்றுக் கரங்களில் கொடிகள்

கட்டிச் செல்கின்றனர்.

பதினெட்டுக் கரங்களிலும்

பாடல்கள்

பல்வேறு மொழிகளில்

செம்மை களைந்து வண்ணங்கள் பூசிய

அவளை

சென்ற இடமெல்லாம் கேட்டனர்

"எந்த நாட்டவள்"

மென்மையேறிய கரங்கள் வலிக்க வலிக்க

கொடிகளால் சுற்றிக் கட்டினாள் அதில்

துப்பாக்கிகள் சொருகினாள்

எவருமற்ற கடல் பரப்பில்

திணை களைந்து நீந்துகிறாள்

உடலெங்கும் புயல் சுமந்து

No comments: