Monday, December 1, 2008

சில அரிய புகைபடங்களும் பல புதிய குப்பை தொட்டிகளும் . . .


பழுப்பு நிறத்தில்
ஓரங்கள் கரைந்த
சதுரங்க அட்டையில்
வியாபித்திருக்கிறது ஒரு நொடி.
சரியாக சிரித்துவிட வேண்டிய
பதற்றத்தில் பற்கள்.
அரை மூடிய கண்களை தவிர்க்க
அவசரமாய் சற்றே மிகையாய்
விரிகிறது விழிகள்.
புகைப்படக்காரர் சிரிக்க சொல்லும் போது கூட
பெரும்பாலும் அப்பாக்களால்
வெறும் உதடு விரிக்க மட்டுமே முடிகிறது.
அம்மகளோ ஏதோ கணத்தில்
தொலைந்த அவரவரின் வாழ்வை
புமிக்கடியில் துலாவ தொடங்கிவிடுகிறார்கள்.

கவிதையை முடிக்கும் கடைசி வார்த்தை போல்
புப்பெய்தியபின் பின் தோன்றும் முதல் பரூ போல்
அதீத முக்கியத்தும் பெறுகிறது
பிம்பங்களால் கட்ட பெரும்
அந்த ஒரு நொடி.
அந்த ஒரு நொடி பற்றி
நாளை வரலாறு பேசலாம்
அல்லது வாசல் குப்பைகளோடு
அவை கலந்து கரைந்து இறந்து போகலாம்.
சில அரிய புகைபடங்களும் . . .
பல புதிய குப்பை தொட்டிகளும் . . .