
யாரை போலவும் இலல்லாமல்
எல்லாரையும் போல் இருக்க
முயற்சிக்கும் சிறு உயிர்கள்
இவர்களின்
சதுர உலகத்தில்
உலவும் ஆச்சர்ய குறிகளுள் சில கீழ்வருமாறு,
நட்டு வைத்த பல்
நாளை முளைக்குமா !?
எட்டு கால் பூச்சிக்கு
எதற்கு இத்தனை கால் !?
வானத்தை பூமி பார்கிறதா
அல்லது பூமி வானத்தை பார்கிறதா !?
அக்காவின் கூந்தல் மட்டும்
ஏன் இத்தனை நீளம் !?
பஞ்சு மிட்டாய் தின்பண்டம் என்றால்
பஞ்சு ஏன் தின்பண்டம் இல்லை !?
பெரியவனாகி நீ என்ன செய்ய போகிறாய்?
ம் !?
முதலில் நான் பெரியவனவேனா ?
இதுவாக ...
இப்படியாக...
இன்னும் பலவாராக..
இதுவாக ...
இப்படியாக...
இன்னும் பலவாராக..
2 comments:
எட்டு கால் பூச்சிக்கு
எதற்கு இத்தனை கால் !?
this thought is Qte!!
oh kartin every kids life is so full of such thoughts and i m quite sure about it! Infact we take some of them to the grave!!
Actualla இந்த மயிலிறகு இருக்கே மயிலறகு அது நெஜம்மாவே குட்டி போடுமா?!
Post a Comment