
என் வாழ்வின் முடிவுகளை பிறர் எடுக்கும் அளவிற்கு
என்னை முடமாக்கிய உன் செய்கைகளால் கூட
உன் மீதான என் காதலை குறைக்க முடியவில்லை
ஆனால் முடிவுகள் மட்டும் இனி எப்போதும்
என்னுடையவை அல்ல
அவை என்னை சுற்றி எடுக்கடுபவை
அவை தானியங்கிகள்
நான் அவற்றால் செயல் படுத்த படுகிறேன்
என் வாழ்வின் இந்நிலைக்கு உன் ஒரு நிமிட
கோபம் மிகுதியே கரணம் என்று தெரிந்திருந்தாலும்
இன்னும் உன்னை முழுவதுமாய் வெறுக்க இயலவில்லை
என் உணர்வுகளோடு நீ செய்த விளையாட்டிற்கு
விலையாய் என் வாழ்வு அடகு கிடக்கிறது
மீட்டெடுக்க முடியாத ஒரு ஆழ் கிடங்கில்
நன்றி
4 comments:
வணக்கம்..
திறந்த கதவுகளின் வெளிச்சத்தில் தெரியும் உங்களைக் கொஞ்சம் தெரிந்திருக்கிறேன் இந்தப் பதின் பத்திகளில்.
மொழி உங்கள் நடையை ஒன்றும் செய்ய முடிவதில்லை.. ஆறும் river ம் ஒன்று போல் ஓடுகின்றன..
நாங்கள் வெறுமனே எழுதுகிறோம் எவனாவது செய்வானென்று.. நீங்கள் செய்து அமைதியாயிருக்கிறீர்கள். வாழ்த்தத் தகுதியில்லை!!
தொடர்கிறேன் பதிவை.. எப்போதேனும் இயலுகையில் பாதையை..
seems endless... so
இதில் விடுபட்டுப் போன எல்லாச் சொற்களும் உங்கள் மனதில் தோன்றக் கடவுவதாக.. :-)
நன்றி தோழரே
moving.. good one.
இக்கவிதையை உணர்ந்து எழுதுனீர்களா இல்லை எழுதி உணர்ந்தீர்களா ... எனக்கு என்னவோ இது நீங்கள் எழுதி உணர்ந்தீர்கள்(உங்கள் அனுபவம்) என்றே தோன்றுகிறது...
Post a Comment