
நான் காடுகளில் தொலையப்போகும் அந்த நாளில் கன மழை பெய்ய வேண்டும்.
என்னிடம் வார்த்தைகள் தீர்ந்து போகும் ஒரு வெறுமையான பொழுதில் அவ்விடத்தை மழை நிரப்ப வேண்டும்..
சத்தியமாய் அதை பற்றி நான் கவிதையோ அல்லது கவிதை போன்ற ஏதோ ஒன்றையோ எழுதிவிட கூடாது..
என் அன்மாவை நனைத்த ஒற்றைத் துளியாய் என்னோடு மட்டும் அது பேசிக்கொண்டிருக்க வேண்டும்
நான் முழுவதுமாய் சிந்தி சிதறும் வரை......