
கனவிலும் கூட
உன்னால் நிராகரிக்கப்படுகிறேன்
விருட்டென்று
வெறுமைக்கு
கண் விழிக்கிறேன்.
மௌனங்களில் கூட
பேரிரிரைச்சல்களால் துரத்தப் படுகிறேன்.
புணரும் போது எழும்
உன் பிம்பங்களை
பொய் என்று ஒதுக்குகிறேன்.
நேரம் என்னை
பரிகாசிக்கிறது.
நெடுந்துயர் என்னை
உயிர்பிக்கிறது.
என் எழுத்துக்கள்
என்னை விலகுகிறது.
நீ மட்டும்
வியாபித்திருக்கிறாய்.