Wednesday, March 31, 2010

Monitor முத்தமும் ஒரு thanglish கவிதையும்.


கணினி கடந்து
என்னை
தொட்டு விடவும்
நெருங்கி விடவும்
துடிக்கும் உன் தவிப்பு.

என்னோடு
மில்க் ஷேக்
பகிர்ந்து கொள்ளும்
பிரயத்தினத்தில்
பாழாய் போன
உன் கீ போர்ட்.

நீ வரைந்ததை
சரியான கோணத்தில்
அசையாமல் காட்டியபின்
நீ செய்யும்
அங்கீகார ஏக்க புன்னகை.

இப்படியான
virtual பரிமாற்றங்களில்
நீ தந்த
monitor முத்தங்களால்
ஈரமாகிறது
என் கன்னமும்
நம் உறவும்.

(என் அக்கா மகன் 4 வயது ஆதி கிட்ட இந்த கவிதைய அவன் வளந்த அப்புறம் படிச்சு காட்டாதீங்கplz!!!!!!)
ஓவியம்: ஆதித்யா

Tuesday, March 30, 2010

கருணையும் கொலையும்


இலைகள் மொத்தமும் உதிர்ந்த
மரத்தில் மிக வேகமாய்
பரவுகின்றன சில
அடர் பச்சை கொடிகள்.
மரம் மட்டும்
மௌனமாகவே நிற்கிறது
.

Thursday, March 18, 2010

சுற்றமும் நட்பும் சூழ. . .


திருமணங்களில் , காதல்
முடிய பெற்றவர்கள்
உதாரண காதலர்கள்
ஆகிவிடுகிறார்கள்.
காதலில் வென்றவர்கள்
என்று வாகை
சூடப் படுகிறார்கள் .
பிறருக்கு ஆலோசனை
சொல்ல தகுதி
உடையவர்களாய்
மாறி விடுகிறார்கள்.
அடிமனதில் அன்பை
புதைத்தவர்கள்
அமைதியாய்
கேட்டுக் கொள்கிறார்கள்.